சென்னை: பல விஷயங்களில் அதிமுக-பாஜக இரண்டு கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன என மூத்த பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் விருந்து உண்ணச் சென்ற தமிழக பாஜக பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:
நரேந்திர மோடி வெற்றி பெற்றதும் அவருக்கு முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தது ஜெயலலிதாதான். அவர் எங்களை பொங்கல் விருந்துக்கு அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.
பல விஷயங்களில் அதிமுக-பாஜக இரண்டு கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பது, விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்துவது, ராமர் பாலம் பிரச்சினைகளில் அதிமுகவும், பாஜகவும் ஒரே கொள்கையுடன் உள்ளன.
அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி பற்றி பாஜக மேலிடம்தான் இறுதி முடிவு செய்யும் என்றார்.