Monday, March 10, 2008

தினம் ஒரு நபிமொழி

ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தங்களின் பிடரியில் முடிச்சுப் போட்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களின் இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடம் ஒருவர், `ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?` என்று கேட்டதற்கு `உன்னைப் போன்ற மடையவர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்கள஡ ?ல் யாருக்குத்தான் இரண்டு ஆடைகள் இருந்தன?` என்று ஜாபிர்(ரலி) கேட்டார்" என முஹம்மத் இப்னு அல் முன் கதிர் அறிவித்தார்.
(புஹாரி பகுதி : 1,அத்தியாயம் : 8 , எண்: 352)