Tuesday, January 26, 2010

சுன்னத் தொழுகைகள்

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டு காட்டித்தந்த கடமையல்லாத தொழுகைக்கு சுன்னத் தொழுகை என்று கூறப்படும். இவ்வகைத் தொழுகையில் கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபி (ஸல்) தொழுது காட்டியுள்ளார்கள்.
இவ்வாறு காட்டிய தொழுகைகளும் மற்ற கடமையில்லா தொழுகைகளும் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே கூடுதல் நன்மையை பெற்றுத் தரும்.
மக்களே! உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகையை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ர­), நூல்கள் : புகாரீ (731), முஸ்­ம் (1432)
சுன்னத்தான, உபரியான தொழுகைகள் இரண்டிண்டாகத் தொழவேண்டும். நான்கு ரக்அத் தொழ வேண்டுமானால் இரண்டு ரக்அத்தில் ஸலாம் கூறிவிடவேண்டும். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும்.

''இரவிலும் பக­லும் தொழக்கூடிய (கடமையல்லாத) தொழுகைகள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தான் இருக்க வேண்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ர­), நூல்: திர்மிதீ (543), அபூதாவூத் (1103),இப்னுமாஜா (1312),அஹமத் (4560), தாரமீ (1422)
பஜ்ர் தொழுகையின் சுன்னத்
ஐவேளைத் தொழுகையில் பின்னணியில் தொழுப்படும் தொழுகையில் பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபி (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
''நபி (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்கு முயற்சி எடுத்ததைப் போல் வேறு எதற்கும் எடுக்க மாட்டார்கள்.''
அறிவிப்பவர்: ஆயிஷா (ர­), நூல்: புகாரீ (1163), முஸ்­ம் (1312)
ஃபஜ்ருக்கு முன் சுன்னத் தொழாமல் கடமையான பர்லுத் தொழுகையை நிறைவேற்றி விட்டால் பின்னர் அதனை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
''இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருவரை ஸுப்ஹுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், ''ஸுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத்கள்'' என்று சொன்னார்கள். அதற்கவர், ''ஸுப்ஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்களைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்'' என்று பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.''
அறிவிப்பவர்: கைஸ் பின் அம்ர் (ர­), நூல்: திர்மிதீ (387)
சுப்ஹ‎ýத் தொழுகை தொழுது விட்டால் சூரியன் உதிக்கும் வரை எந்த உபரியான தொழுகைகளையும் தொழக் கூடாது.
சுபுஹ் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும் அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபி(ஸல்) நடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: உமர்(ர­), நூல்: புகாரி (581),முஸ்­ம் (1503)
லுஹர் சுன்னத்
லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு பின்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழலாம்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­), நூல்கள் : புகாரீ (937), முஸ்­ம் (1322)
லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹ‎ýக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர­) நூல்: புகாரீ (1182),நஸயீ (1736),அபூதாவூத் (1062), அஹ்மத் (23204)

''யார் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்களும், பின்பு நான்கு ரக்அத்களும் தொழுவாரோ அவருக்கு நரகத்தை இறைவன் தடுத்து விடுகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.''
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ர­), நூல்: திர்மிதீ (392)
1201நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் லுஹர் தொழுகைக்கு முன்னர் நான்கு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­), நூல் : முஸ்­ம் (1323)
அஸர் தொழுகை சுன்னத்
அஸருடைய சுன்னத்
அஸருடைய முன் சுன்னத் இரண்டு அல்லது நான்கு ரக்அத்களாகும்.
''ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) விரும்பியவர்கள் தொழலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர­), நூல்கள்: புகாரீ (624),முஸ்­ம் (1522)
மஃரிப் தொழுகையின் சுன்னத்
மஃரிப் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் ஆகும்.
மஃரிபிற்கு முன்னர் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை விரும்பியவர் தொழட்டும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர­), நூல்: புகாரீ (1183), அபூதாவூத் (1089),அஹ்மத் (19643)

நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர­), நூல் : இப்னுஹிப்பான் (1588)
முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித் தோழர்கள் (ஸ‎ýன்னத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாம­ருந்தும் மஃரிபுக்கும் முன் இரண்டு ரக்அத் தொழுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர­), நூல் : புகாரீ (625),நஸயீ (675),
''நபி (ஸல்) அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.'' (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­), நூல்: புகாரீ (937)
இஷா தொழுகையின் சுன்னத்
இஷாத் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் அல்லது நான்கு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் ஆகும்.
ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) விரும்பியவர்கள் தொழலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர­), நூல்கள்: புகாரீ (624),முஸ்­ம் (1522)

''நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள்.'' (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­), நூல்:புகாரீ (937)