Thursday, October 16, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள்

لاَ إِلَـهَ إِلاَّ اللهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ، لاَإِلَـهَ إِلاَّ اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ، لاَ إِلَـهَ إِلاَّ اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ اْلأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ
பொருள்: வணக்கத்திற்குரியவன் மகத்தான, கணிவான அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் மேன்மைமிக்க, அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. வணக்கத்திற்குரியவன் வானங்கள், பூமி மற்றும் கண்ணியத்திற்குரிய அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்

أَللَّهُمَّ أَكْثِرْ مَالِيْ وَوَلَدِيْ ، وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَنِيْ
பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு செல்வத்தையும் சந்ததியையும் அதிகப்படுத்துவாயாக! மேலும் எனக்கு நீ கொடுத்தவற்றில் அபிவிருத்தி செய்வாயாக!
ஆதார நூல்: புகாரி

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ
பொருள்: யாஅல்லாஹ்! நான் செய்தவைகளின் தீயவிளைவை விட்டும் நான் செய்யாதவற்றின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதார நூல்: புகாரி

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَ ةِ نِقْمَتِكَ، وَجَمِيْعِ سَخَطِكَ
பொருள்: யாஅல்லாஹ்! உனது அருட்கொடைகள் (என்னை விட்டு) நீங்குவதை விட்டும் ஆரோக்கியத் தன்மை (என்னைவிட்டு) மாறுவதை விட்டும் உனது திடீர் தண்டனையை விட்டும் உனது அனைத்துக் கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதார நூல்: புகாரி

أَللَّهُمَّ اهْدِنِيْ وَسَدِّدْنِيْ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ
பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! அதில் உறுதியாக நிற்கச் செய்வாயாக! யாஅல்லாஹ்! நேர்வழியையும் அதில் உறுதியாக நிற்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
ஆதார நூல்: புகாரி

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ، أَللَّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا، زَكِّهَا أَنْتَ خَيْرُمَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا، أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَيَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لاَيَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لاَيُسْتَجَابُ لَهَا
பொருள்: யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், வயோதிகம் மற்றும் கப்ர் வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். யாஅல்லாஹ்! என் உள்ளத்தில் உனது அச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனை தூய்மைப்படுத்துவாயாக! நீதான் அதனைத் தூய்மைப் படுத்துவோரில் மிகச் சிறந்தவன். நீயே அதன் பொறுப்பாளன். நீயே அதன் தலைவனுமாவாய். யாஅல்லாஹ்! பயனளிக்காத கல்வியைவிட்டும் (உனக்கு) பயப்படாத உள்ளத்தை விட்டும் நிறைவடையாத மனதை விட்டும் பதிலளிக்கப்படாத பிரார்த்தனையை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதார நூல்: புகாரி

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَي
யாஅல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும் பத்தினித் தனத்தையும் (பிறரிடம்) தேவையற்ற நிலையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
ஆதார நூல்: புகாரி

أَللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِي الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ ، وَأَصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ ، وَأَصْلِحْ لِيْ آخِرَتِي الَّتِيْ فِيْهَا مَعَادِيْ ، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِّيْ فِيْ كُلِّ خَيْرٍ ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِّيْ مِنْ كُلِّ شَرٍّ
பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு சீர்படுத்து வாயாக! ஏனெனில் அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக!
ஆதார நூல்: புகாரி

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوْءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ اْلأَعْدَاءِ
பொருள்: யாஅல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும் விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீயமுடிவுகளை விட்டும் விரோதிகளின் கேளி, கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்
ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம்

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ وَالْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
பொருள்: யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம், கப்ரின் வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம்

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ ، وَعَذاَبِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنَى ،وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِـيْحِ الدَّجَّـالِ، اَللَّهُمَّ اغْسِلْ قَلْبِيْ بِمَـاءِ الثَّلْجِ وَالْبَـرَدِ، وَنَقِّ قَـلْبِيْ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ
பொருள்: இறைவா! நரகின் சோதனை, நரக வேதனை, கப்ரின் சோதனை, கப்ரின் வேதனை, செல்வத்தின் சோதனையின் தீயவிளைவு, வறுமையின் சோதனையின் தீயவிளைவு ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! மஸீஹுத் தஜ்ஜாலுடைய சோதனையின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பனிக் கட்டி மற்றும் பனித்துளி நீரால் என் உள்ளத்தை கழுவி விடுவாயாக! வெண்மையான துணியை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்துவதைப் போல் என் உள்ளத்தை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் நீ ஏற்படுத்தியுள்ள தூரத்தைப் போல எனக்கும் என் பாவங்களுக்கும் மத்தியில் தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! சோம்பல், பாவச்செயல், மற்றும் கடன் ஆகியவற்றிலிருந்து நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம்

اَللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي اْلآخِرَةِ حَسَنَةً،وَقِنَا عَذَابَ النَّارِ
பொருள்: இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பாக்கியங்களைத் தருவாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!
ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம்