Monday, November 24, 2008

கல்வியின் சிறப்பு

அல்லாஹ் கூறுகிறான் :
இறைவா கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 20:114)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''கல்வியைத் தேடியவராக ஒரு வழியில் ஒருவர் நடந்தால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலகுவாக்குகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1381 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நேர்வழியின் பக்கம் ஒருவர் அழைத்தால், அதைப் பின்பற்றுவோருக்கு கிடைப்பது போன்ற கூலி அழைத்தவருக்கும் கிடைக்கும். இது, அவர்களின் கூலிகளில் எதையும் குறைத்து விடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1382 )

அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஆதமின் மகன் (மனிதன்)இறந்து விட்டால் மூன்றைத் தவிர மற்ற செயல்கள் எல்லாம் முடிந்து விடும். 1) தொடர்ந்து நன்மை தரும் தர்மம் 2) இவர் மூலம் பயன் பெறப்படும் கல்வி 3) அவருக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல குழந்தை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1383 )

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவர் கல்வியை தேடிச் சென்றால், அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் வழியில் உள்ளார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(திர்மிதீ)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1385 )

ஆபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஓர் இறைநம்பிக்கையாளர், சொர்க்கத்தை அடையும் வரை அவர் நல்ல காரியங்களில் (நன்மை பெறுவதில்) திருப்தியடையமாட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1386 )

அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நிச்சயமாக அல்லாஹ், மக்களிடமிருந்து முற்றிலுமாக கல்வி அறிவைக் கைப்பற்றி விட மாட்டான். எனினும் அறிஞர்களை கைப்பற்றுவதின் மூலம் கல்வி அறிவைக் கைப்பற்றுவான். இறுதியாக எந்த அறிஞரும் இல்லை என்றாகி விட்டால் மக்கள் மடையர்களை தலைவர்களாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் (நியாயம்) கேட்கப்பட்டால், அறிவின்றி தீர்ப்புக் கூறுவார்கள். இதனால் அவர்கள் தானும் வழிகெட்டு, பிறரையும் வழி கெடுப்பார்கள்''என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1392 )

குறிப்பு: علم - Ilm என்ற அரபி சொல்லுக்கு கல்வி, அறிவு, அறிவியல் என்று அர்த்தம். அல்லாஹ்வின் வேதத்திலும் ஹதீஸ்களிலும் علم الدين மார்க்க கல்வி என்று குறிப்பிடவே இல்லை. எனவே, கல்வி என்றால் மார்க்க கல்வி, உலக கல்வி, பொது அறிவு அனைத்திற்கும் பொருந்தும்.