Wednesday, November 26, 2008

பிரார்த்தனையின் சிறப்பு

அல்லாஹ் கூறுகிறான் :
''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன், எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான். ( அல்குர்ஆன் : 40 : 60 )

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் ! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். ( அல்குர்ஆன் : 7 : 55 )

ஷஹ்ரு இப்னு ஹவ்ஷப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''மூஃமின்களின் அன்னையே! உங்கள் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் போது, எந்த துஆவை அதிகம் ஓதுவார்கள்?'' என்று கேட்டேன். ''யா முகல்லிபல் குலூபி ஸப்பித் கல்பீ அலா தீனிக'' என்பதுதான் அவர்களின் துஆவில் அதிகமாக இருந்தது என்று பதில் கூறினார்கள். '' (திர்மிதீ)

பொருள் : இதயங்களைப் புரட்டுபவனே! ஏன் இதயத்தை உன் மார்க்கத்திலே உறுதிபடுத்துவாயாக!( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1489 )


அபூஉமாமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நபி(ஸல்) அவர்கள் அதிகமாக துஆ செய்வார்கள். அதில் எதையும் நாங்கள் மனனம் செய்ததில்லை. (ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம்) இறைத்தூதர் அவர்களே! அதிகமாக துஆ செய்கிறீர்கள். அதிலிருந்து எதையும் நாங்கள் மனனம் செய்யவில்லையே என்று கூறினோம். ''அவை அனைத்தையும் சேர்த்து உங்களுக்கு நான் கூறட்டுமா?'' ''அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் கய்ரி மா ஸஅலக மின்ஹு நபிய்யுக முஹம்மது(ஸல்), வஅஊது பிக மின் ஷர்ரி மஸ்தஆப்த மின்ஹுநபிய்யுக முஹம்மது(ஸல்), வஅன்தல் முஸ்தஆனு, வஅலய்கல் பலாஃகூ, வலா ஹவ்ல, வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் என்று கூறுவீராக! எனக் கூறினார்கள். (திர்மிதீ)
பொருள்:
இறைவா! உன் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உன்னிடம் கேட்ட நல்லவற்றை அனைத்தையும் உன்னிடம் நான் கேட்கிறேன். உன் நபி முஹம்மது (ஸல்) உன்னிடம் பாதுகாப்புத் தேடிய தீமையானவற்றை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ உதவி செய்ய கோரப்படுபவன். உன்னிடமே நான் கேட்டவை உண்டு. எந்த திரும்புதலும், சக்தியும் உன்னிடமே தவிர வேறில்லை. ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1492 )