Sunday, November 30, 2008

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளைபெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்

1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத்தவிரஎன்றுநபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.ஆதாரம் : புகாரி

2-நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்:

1-ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி வர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்

2-உபரியான தொழுகைகள், நோன்புகள், தர்மங்கள், உறவினர்களுக்கு உதவுவது, குர்ஆன் ஓதுவது, பாவமன்னிப்பு தேடுவது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது. குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆதாரம் - புகாரிமுஸ்லிம்

3-அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு(நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது. அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லைஎன்பதைமக்களுக்குஅறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம்-புகாரி,முஸ்லிம்

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர்கூறுவது துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள்எனநபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.ஆதாரம்-அஹ்மத்இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்றமற்றமக்களும்தக்பீர்கூறுவார்கள். ஆதாரம்-புகாரிபெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகைவரைக்கும்கூறுவது.

5-ஹஜ்பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்துகொள்வது. நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ளவேண்டும்என்றார்கள்.ஆதாரம்-புகாரி,முஸ்லிம்

6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும்இதுநபியவர்கள்வலியுறுத்தியசுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.ஆதாரம்-புகாரிஉழ்ஹிய்யாகொடுப்பதற்குதகுதியானபிராணிகள் ஆடு. மாடு ஒட்டகம் (புகாரி) ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் - (திர்மிதி)

மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம் - (திர்மிதி) உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்டகுறைகள்இருக்கக்கூடாது:கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை. நேரம் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்குபின் அறுக்கவேண்டும் யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும். யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.ஆதாரம் - புகாரி, முஸ்லிம்
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் எனநபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்) அறுக்கும்முறை ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும்(முஸ்லிம்) ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும்.(முஸ்லிம்) அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறைஉழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாககொடுக்கக்கூடாது.குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்-புகாரி,முஸ்லிம் உழ்ஹிய்யாகொடுப்பவர்செய்யக்கூடாதவைகள்துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாதுஎனநபி(ஸல்)அவர்கள்தடைசெய்தார்கள்.ஆதாரம்:-முஸ்லிம்

குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.

Wednesday, November 26, 2008

பெருமானாரின் பத்துக் கட்டளைகள்

1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….
பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-
அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.
முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.
ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திறகுச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!'அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.
இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!
இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறiவா!நீயே இதற்கு சாட்சி!இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்

பெற்றோர்

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன" வென்று கேட்டார். அதற்கு நபி "அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள்" என்றார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா

தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி

ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்?" எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் "உம்முடைய தாய்" என்று கூறினார்கள். "அதற்கடுத்து யார்?" என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் "உம்முடைய தாய்" என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக "அதற்கடுத்து யார்?" என கேட்ட போது இறைதூதர் அவர்கள் "உம்முடைய தாய்" என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் "அதற்கடுத்து யார்?" எனக் கேட்ட போது "உம்முடைய தந்தை" என்றும் படிப்படியாக "நெருங்கிய உறவினர்களும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." அல்குர்ஆன் 31:14

" பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக" அல்குர்ஆன் 17:23

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244

அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் "அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?" முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்" என்று பதலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

பெற்றோரை கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனையை அடைவர்!
பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ

பெற்றோரின் திருப்தி
பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபி கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபி பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி

பெற்றோரை பேணுதலும் ஜிஹாத்
ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன் என்று கூறினார். உனக்கு தாய் உண்டா? என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி) அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ) அல்லாஹ்வின் தூதர் நமக்கு கூறிச்சென்ற அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெருவோமாக!

பிரார்த்தனையின் சிறப்பு

அல்லாஹ் கூறுகிறான் :
''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன், எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான். ( அல்குர்ஆன் : 40 : 60 )

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் ! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். ( அல்குர்ஆன் : 7 : 55 )

ஷஹ்ரு இப்னு ஹவ்ஷப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''மூஃமின்களின் அன்னையே! உங்கள் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் போது, எந்த துஆவை அதிகம் ஓதுவார்கள்?'' என்று கேட்டேன். ''யா முகல்லிபல் குலூபி ஸப்பித் கல்பீ அலா தீனிக'' என்பதுதான் அவர்களின் துஆவில் அதிகமாக இருந்தது என்று பதில் கூறினார்கள். '' (திர்மிதீ)

பொருள் : இதயங்களைப் புரட்டுபவனே! ஏன் இதயத்தை உன் மார்க்கத்திலே உறுதிபடுத்துவாயாக!( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1489 )


அபூஉமாமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நபி(ஸல்) அவர்கள் அதிகமாக துஆ செய்வார்கள். அதில் எதையும் நாங்கள் மனனம் செய்ததில்லை. (ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம்) இறைத்தூதர் அவர்களே! அதிகமாக துஆ செய்கிறீர்கள். அதிலிருந்து எதையும் நாங்கள் மனனம் செய்யவில்லையே என்று கூறினோம். ''அவை அனைத்தையும் சேர்த்து உங்களுக்கு நான் கூறட்டுமா?'' ''அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் கய்ரி மா ஸஅலக மின்ஹு நபிய்யுக முஹம்மது(ஸல்), வஅஊது பிக மின் ஷர்ரி மஸ்தஆப்த மின்ஹுநபிய்யுக முஹம்மது(ஸல்), வஅன்தல் முஸ்தஆனு, வஅலய்கல் பலாஃகூ, வலா ஹவ்ல, வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் என்று கூறுவீராக! எனக் கூறினார்கள். (திர்மிதீ)
பொருள்:
இறைவா! உன் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உன்னிடம் கேட்ட நல்லவற்றை அனைத்தையும் உன்னிடம் நான் கேட்கிறேன். உன் நபி முஹம்மது (ஸல்) உன்னிடம் பாதுகாப்புத் தேடிய தீமையானவற்றை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ உதவி செய்ய கோரப்படுபவன். உன்னிடமே நான் கேட்டவை உண்டு. எந்த திரும்புதலும், சக்தியும் உன்னிடமே தவிர வேறில்லை. ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1492 )

Monday, November 24, 2008

கல்வியின் சிறப்பு

அல்லாஹ் கூறுகிறான் :
இறைவா கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 20:114)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''கல்வியைத் தேடியவராக ஒரு வழியில் ஒருவர் நடந்தால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலகுவாக்குகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1381 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நேர்வழியின் பக்கம் ஒருவர் அழைத்தால், அதைப் பின்பற்றுவோருக்கு கிடைப்பது போன்ற கூலி அழைத்தவருக்கும் கிடைக்கும். இது, அவர்களின் கூலிகளில் எதையும் குறைத்து விடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1382 )

அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஆதமின் மகன் (மனிதன்)இறந்து விட்டால் மூன்றைத் தவிர மற்ற செயல்கள் எல்லாம் முடிந்து விடும். 1) தொடர்ந்து நன்மை தரும் தர்மம் 2) இவர் மூலம் பயன் பெறப்படும் கல்வி 3) அவருக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல குழந்தை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1383 )

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவர் கல்வியை தேடிச் சென்றால், அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் வழியில் உள்ளார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(திர்மிதீ)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1385 )

ஆபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஓர் இறைநம்பிக்கையாளர், சொர்க்கத்தை அடையும் வரை அவர் நல்ல காரியங்களில் (நன்மை பெறுவதில்) திருப்தியடையமாட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1386 )

அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நிச்சயமாக அல்லாஹ், மக்களிடமிருந்து முற்றிலுமாக கல்வி அறிவைக் கைப்பற்றி விட மாட்டான். எனினும் அறிஞர்களை கைப்பற்றுவதின் மூலம் கல்வி அறிவைக் கைப்பற்றுவான். இறுதியாக எந்த அறிஞரும் இல்லை என்றாகி விட்டால் மக்கள் மடையர்களை தலைவர்களாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் (நியாயம்) கேட்கப்பட்டால், அறிவின்றி தீர்ப்புக் கூறுவார்கள். இதனால் அவர்கள் தானும் வழிகெட்டு, பிறரையும் வழி கெடுப்பார்கள்''என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1392 )

குறிப்பு: علم - Ilm என்ற அரபி சொல்லுக்கு கல்வி, அறிவு, அறிவியல் என்று அர்த்தம். அல்லாஹ்வின் வேதத்திலும் ஹதீஸ்களிலும் علم الدين மார்க்க கல்வி என்று குறிப்பிடவே இல்லை. எனவே, கல்வி என்றால் மார்க்க கல்வி, உலக கல்வி, பொது அறிவு அனைத்திற்கும் பொருந்தும்.

அல்லாஹ்வை புகழ்தல், அவனுக்கு நன்றி செலுத்துதல்

அல்லாஹ் கூறுகிறான் :
''என்னை நினையுங்கள் நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!'' (அல்குர்ஆன் : 2:152)

''நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது.'' (அல்குர்ஆன் : 14:7)

''சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!
(அல்குர்ஆன் : 17:111)

''அல்லாஹ்வே! நீ தூயவன்'' என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து. ''அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும். (அல்குர்ஆன் : 10:10)

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஓர் அடியான் உணவைச் சாப்பிட்டு, அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறான். மேலும் தண்ணீர் குடித்து விட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறான். இந்த அடியானைக் கண்டு அல்லாஹ் திருப்தியுறுகின்றான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1396 )

ஸலவாத்

ஃபழாலா இப்னு உபைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவர் தன் பிரார்த்தனையின் போது அல்லாஹ்வைப் புகழாமல், நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து அவரிடமோ, அல்லது மற்றவரிடமோ, ''உங்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தால் முதலில் தன் இறைவனைப் புகழ ஆரம்பிக்கட்டும். பின்பு என் மீது ஸலவாத் கூறட்டும்! பின்னர் தான் விரும்பியதை கேட்கட்டும்'' என்று கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1404 )

அபூ முஹம்மத் என்ற கஹ்ப் இப்னு உஜ்ரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு ஸலாம் எப்படிக் கூறுவது?'' என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் மீது எப்படி ஸலவாத் கூறுவது? என்று கேட்டோம் ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்! அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்'' என்று கூறுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஸலவாத்தின் பொருள்:
இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்பத்தார் மீது நீ அருள் புரிந்தது போல், நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக! நீயே புகழுக்குரியவன், தகுதிக்குரியவன் ஆவாய்.
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1405 )

அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் : 33:56)

அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''(நபியாகிய) என்மீது ஒருவர் ஒரு தடவை ''ஸலவாத்'' கூறினால், அவர் மீது அல்லாஹ் பத்து முறை ''ஸலவாத்'' கூறுகின்றான் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1397 )

அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நாட்களில் மிகச்சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். எனவே அன்று என்மீது ஸலவாத் அதிகம் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத், என்னிடம் எடுத்துக் காண்பிக்கப்படுகிறது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! நீங்கள் மண்ணோடு மண்ணான நிலையில் எங்களின் ஸலவாத் எப்படி எடுத்துக் காண்பிக்கப்படும்'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''நிச்சயமாக நபிமார்களின் உடல்களை (சாப்பிட) பூமிக்கு அல்லாஹ் தடை செய்து விட்டான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1399 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''என் புதைகுழியை (கப்ரை) விழா கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். என் மீது ஸலவாத் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத், நீங்கள் எங்கு இருந்தாலும் என்னை வந்து சேரும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூது)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1401 )

ஃதிக்ரின் சிறப்பு

அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது ( அல்குர்ஆன் : 29:45 )

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். ( அல்குர்ஆன் : 2:152 )

(நபியே) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! ( அல்குர்ஆன் : 7:205 )

அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!
( அல்குர்ஆன் : 62:10 )

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! ( அல்குர்ஆன் : 33:41,42 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''இரண்டு வார்த்தைகள் உண்டு. அவை நாவிற்கு (கூற) எளிதானது, தராசில் (நன்மையால்) கனமானது, இறைவனுக்கு விருப்பமானதும் ஆகும். (அவை) 1) சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி 2) சுப்ஹானல்லாஹில் அளீம்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

பொருள்:
1) அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்
2) கண்ணியமிக்க அல்லாஹ்வை துதிக்கிறேன் ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1408 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, வலாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்'' என்று நான் கூறுவது, சூரியன் உதிக்கும் (பூமியில் கிடைக்கும்) பொருட்கள் (எனக்கு கிடைப்பதை) விட எனக்கு மிக விருப்பமானதாகும் என்று நபி(ஸல்)கூறினார்கள். (முஸ்லிம்)


(பொருள்: அல்லாஹ் தூய்மையானவன். அவனுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அல்லாஹ்வே மிகப் பெரியவன்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1409 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

ஒருவர், ''லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீகலஹுலஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்;'' என்று ஒரு நாளைக்கு நூறு தடைவ கூறினால், பத்து அடிமைகளை உரிமை விட்ட நன்மை அவருக்கு உண்டு. அவருக்கு 100 நன்மைகள் எழுதப்படும். அவரை விட்டும் 100 தீமைகள் அழிக்கப்படும். அந் நாளில் மாலை வரை ஷைத்தானை விட்டும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அவரை விட அதிகமாக நற்செயல் செய்தவரைத் தவிர, வேறு எவரும் இவர் கொண்டு வந்ததைவிட மிகச்சிறந்த ஒன்றை கொண்டு வந்தவராக மாட்டார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

மேலும், ''சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி'' என்று ஒரு நாளில் நூறு தடவைக் கூறினால், அவரின் குற்றங்கள் கடல் நுரை அளவுக்கு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1410 )

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

Hadeeth

Once Prophet MUHAMMAD (SWS) said, "If the people knew the reward for the Dhuhur prayer in its early time, they would race for it.

If they knew the reward for "Isha" and the "Fajr" prayers in congregation, they would join them even if they had to crawl.

If they knew the reward for the first row, they would draw lots for it".(Sahih AL-Bukhari vol. 1: no.688)Please keep forwarding this Hadith to all...because The ProphetMUHAMMAD Sallallahu alaihi wa sallam) said: "pass on knowledge from me, even if it is only one verse".

Three important and beneficial things, Hazrat Muhammad (Sallallahu alaihi wasallam ) says that "if a person recite:
1. "Ayatal Kursi" after every Fardh Namaz (Salaah) then there will be nothing between him and Heaven except Death"
2) There is a Hadith that says "La Haula Wala Quuata illa billahil aliyul adheem" is such a great medicine that it cures every disease and the most minor disease it cures is "Sorrow"
3) Another Hadith says "if a person recites surah ikhlaas, (Khulhuwallahu ahad ....) 10 times in a day then Allah build a palace for him in the Heaven. (Subhaan Allah)" and the last but not the least Allah says "spread the knowledge whatever u have. ....Its duty of each and every Muslim".

Wednesday, November 19, 2008

The useful information for Haji's

Telephone Numbers at Makah
.Indian Haj Office,
.
IN FRONT OF AJYAD MAKKAH HOTEL,
AJYADMAKKAH AL-MUKARRAMA (P.O. BOX NO. 5781].
Phone: 009662 5759034, 5758231, 5758209, 5758208.
IMAM M. HUSAIN,
In-charge, Indian Haj Mission, Makkah.
Phone:009662-5758216
NADEEM SIDDIQUI,
Assistant Welfare Indian Haj Mission, Makkah.
Phone:009662-5758209.
.
MEDICAL OFFICER,
.
In-charge, Indian Medical Mission, Makkah.
Phone:009662-5758209, 5758214
.
POLICE STATION
.
Haram Shareef Police Station 02- 575 0200
Police Station near Haram Shareef (Ajyad) 02- 534 1165
Misfalah Police Station 02- 574 1283
Qararah Police Station 02- 574 6808
Haram Sharief Madinah Al-Munawwrah 009664-823 0930
.
INDIAN HAJ OFFICE,
.
Madinah Al-Munawwrah,Behid National Company, Near Al-Quds-Hotel,Sitteen Street, Madinah-AI-MunawwarahPhone: 009664 8380025, 8344715 Fax: 8387549
.
PILGRIM RECEPTION CENTRE,
.
Hijra RoadPhone: 009664 8261941, Fax: 8264096.
.
CONSULATE GENERAL OF INDIA
.
Building of Bugshan & Brothers, Next to Al-Mira Carpets,Sharafia Dist, Madinah Road, PO Box 952, Jeddah- 21421Phone: 0096626520104, 6520112, 6517581Fax: 009662-6533964
DR. AUSAF SAYEED, Consul General 009662-6520072
DR.SUHELAJAZKHAN, Consul (Haj) 009662-6520084 (Direct)
MR. D. K. SRIVASTAVA, Vice Consul (Haj) 009662-6510514
HAJ SECTION 009662-6533032
.
NEAR HARAM SHAREEF, MAKKAH (ISD Code -009662)·
.
Ajyad Hospital, Ajyad Phone: 5730070·
King Abdul Aziz Hospital, Zahir Phone: 5442400·
Noor Hospital, Azizia Junubia Phone: 5665000·
Hera General Hospital, Taneim Phone: 5201604.·
King Faisal Hospital, Shisha Phone: 5566411·
Ministry of Health, Mohalla Zahir Opp. Jawazat,· Makkah Phone: 5457774.
.
MADINAH AL-MUNAWWARAH (ISD Code-009664)·
.
Director of Health, Dr. Abdul Qader Ahmed· Al-Tayyeb, Matar Road. Phone: 8370600.·
King Fahad Hospital, Tabuk Phone: 8460145 (Fax) 8460900.·
Ohud Hospital, University Road Phone: 8460016·
Meeqat Hospital, Meeqat Road Phone: 8237892.·
Chest Hospital, Qurban Road Phone: 8266639.·
Children & Maternity Hospital,· Sitteen Road.Phone: 8361000.·
Al-Ansar Hospital, Behind Masjid Ijaba, Sitteen Road. Phone: 8361848.