மினரல் வாட்டர் பாட்டிலை தொடர்ந்து பயன்படுத்தினால் ` கேன்சர்' தாக்கும் . சுகாதார அதிகாரி எச்சரிக்கை
http://www.dailythanthi.com/article.asp?NewsID=380309&disdate=12/13/2007&advt=2
திருச்சி, டிச .13- மினரல் வாட்டர் பாட்டிலை தொடர்ந்து பயன்படுத்தினால் கேன்சர் நோய் தாக்கும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . திருச்சி மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் வீரபாண்டியன் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரில் ஆய்வு நடத்தினார். ……, ……, ……
கேன்சர் நோய் தாக்கும்
பின்னர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வீரபாண்டியன் கூறுகையில்,
பாட்டில்களில் விற்கப்படும் மினரல் வாட்டரை இப்போது பலர் அதிகமான அளவில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
அதில் தவறு இல்லை.
இவ்வாறு வாங்கும் மினரல் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்திய பின் பலர் தொடர்ந்து தண்ணீர் வைத்துக்கொள்வதற்காக அந்த பாட்டில்களை உபயோகப்படுத்துகிறார்கள் .
இந்த பாட்டில்கள் ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருட்களின் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றில் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி வைத்து குடித்து வந்தால் கேன்சர் தாக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
எனவே மினரல் வாட்டர் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடித்த பின் அதனை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குடிநீரை எடுத்து செல்வதற்காக அதற்கென தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் பாட்டில்களையே பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றார்.