Tuesday, January 29, 2008

Apple MacBook - World's Thinnest Laptop!!



APPLE MacBook Air


• 13.3-inch LED-backlit glossy widescreen display with 1280x800 resolution;
• 1.6 GHz Intel Core 2 Duo processor with 4MB L2 cache;
• 800 MHz front-side bus;
• 2GB of 667 MHz DDR2 SDRAM;
• 80GB hard disk drive with Sudden Motion Sensor;
• Intel Graphics Media Accelerator X3100;
• Micro-DVI port (includes Micro-DVI to VGA and Micro-DVI to DVI Adapters);
• built-in iSight video camera;
• built-in AirPort Extreme 802.11n wireless networking and Bluetooth 2.1+EDR;
• one USB 2.0 port;
• one headphone port;
• multi-touch TrackPad with support for advanced multi-touch gestures including tap, scroll, pinch, rotate and swipe; and
• 45 Watt MagSafe Power Adapter.

Regards,

Zain

Monday, January 21, 2008

Sunday, January 20, 2008

Anti-Quran film expected to test the limits of Dutch tolerance

Anti-Quran film expected to test the limits of Dutch tolerance - International News



Anti-Quran film expected to test the limits of Dutch tolerance

The Hague (Netherlands): A maverick lawmaker's planned anti-Quran film has the Dutch wrestling with the limits of their centuries-old traditions of tolerance and free speech.

It also has the government scrambling to limit potential fallout in the Muslim world if the film is aired, as well as in its own Muslim community: the maker of a previous film critical of Islam was brutally murdered on a Dutch street.

Embassies overseas are being kept posted on a national debate about Islam unleashed by Geert Wilders, the 42-year-old leader of the Freedom Party, who sees a ''tsunami of Islamization'' engulfing the Netherlands, whose population of 16.3 million includes 850,000 Muslims.

Wilders says his film — which he has not yet finished, nobody has seen and is expected to be only about 10 minutes long — will expose how the Quran fosters intolerance of women and homosexuals and is used by radicals to incite violence.

''There are concerns here and abroad that the film could be offensive and could lead to reactions that endanger public order, security and the economy,'' Prime Minister Jan Peter Balkenende said last week. ''The government is preparing for possible reactions to the film here and overseas.''

Dutch diplomats in Islamic nations are making clear that while the government strongly disagrees with Wilders' extreme views, it cannot stop him expressing them. Cities across the Netherlands also are on alert for possible protests.

''The Netherlands has a tradition of freedom of speech, religion and lifestyle. The Netherlands also has a tradition of respect, tolerance and responsibility. Unnecessarily offending certain groups does not belong here,'' Balkenende said. ''The government will respect both these traditions and appeals to all sides to do the same.''

Once Wilders has finished the film he still has to find a broadcaster prepared to air it. If he cannot find one, he says he will post it on the Internet.

Wilders is iconic for the Stop Islamisation Of Europe movement, a loose alliance of far-righters in a dozen or so European nations who say Islam is becoming ''a dominant political force in Europe.''

While far-righters are united in their rejection of multiculturalism and resent immigration, especially from Islamic nations, Wilders is so outspoken on both issues that he is in a league of his own.

He calls Islam intensely intolerant and wants the Dutch government to ban the Quran (''that horrible, fascist book that incites violence'') as it outlawed Adolf Hitler's ''Mein Kampf'' after the Second World War. He has lived with round-the-clock security for more than three years because of his views.

Source: AP

வந்தாச்சு ஒரு லட்சம் ரூபாய் வீடு

அதிமுக-பாஜக ஒரே கொள்கை உடையவை-ரவிசங்கர் பிரசாத்

சென்னை: பல விஷயங்களில் அதிமுக-பாஜக இரண்டு கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன என மூத்த பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் விருந்து உண்ணச் சென்ற தமிழக பாஜக பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:

நரேந்திர மோடி வெற்றி பெற்றதும் அவருக்கு முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தது ஜெயலலிதாதான். அவர் எங்களை பொங்கல் விருந்துக்கு அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

பல விஷயங்களில் அதிமுக-பாஜக இரண்டு கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பது, விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்துவது, ராமர் பாலம் பிரச்சினைகளில் அதிமுகவும், பாஜகவும் ஒரே கொள்கையுடன் உள்ளன.

அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி பற்றி பாஜக மேலிடம்தான் இறுதி முடிவு செய்யும் என்றார்.

14 வயதில் 29 பதக்கங்களை குவித்த பள்ளி மாணவன்

செங்கோட்டை: 14 வயதே நிரம்பிய 9ம் வகுப்பு மாணவன், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று 29 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

நெல்லை மாவட்டம், செங்கோட்டை காசுக்கடை பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேனின் மகன் முகமது முஸ்தபா (14). பழைய குற்றாலத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜாகீர் உசேன் கடந்த 8 வருடங்களாக குங்பூ, கராத்தே, ஊசூ, சிலம்பம், வாள் சுழற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார்.

இவர் இதுவரை 17 தங்கம், 12 சில்வர், 2 வெண்கலம் பதக்கங்களையும் பெற்றுள்ளான். மேலும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாநில ஊசூ சாம்பியன்ஷிப் போட்டியில் சப்-சீனியர் பிரிவில் இரண்டாம் பரிசும், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியின் கட்டா பிரிவில் முதல் பரிசும் பெற்றுள்ளார்.

ஏராளமான போட்டிகளில் முதலிடத்தை பெற்றுள்ள இம்மாணவருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த ஆண்டு முதல் கல்வி உதவித் தொகையாக ரூ.1,600 வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.பிரகாஷ் வழங்கி இம்மாணவரை பாராட்டினார்.

மேலும் இவர் வருடம் தோறும் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் குற்றால சாரல் விழாவில் வீரதீர விளையாட்டினை தொடர்ந்து நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த வயதில் பிளாக் பெல்ட், கலைமதி விருது, உள்ளிட்ட பல்வேறு விருதுகள், நூற்றுக்கணக்கான கேடயம், சான்றிதழ்களை வீரதீர விளையாட்டுகள் மூலம் இம்மாணவன் பெற்றுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீரவாஞ்சி நாதன் பிறந்த செங்கோட்டையில் பிறந்த இம்மாணவர் வீரதீர விளையாட்டுகள் மூலம் சாதனை படைத்து வருவது நெல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

Wednesday, January 16, 2008

தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசு நிறுவனம், அரசு உதவி பெறும் நிறுவனம், தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு பொது அலுவலகத்திலும் குடிமகன்கள் எந்தத் தகவலையும் கேட்டு அறியலாம்.

பொது மக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கும் செய்திக் கட்டுரை இது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் 11.05.2005ல் நிறைவேற்றப்பட்டது.
ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் தேவையில்லை.

எந்த ஒரு பொது அலுவலகத்திலும் கேட்கலாம். அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மட்டும் மறுக்கப்படலாம். உதாரணத்திற்கு நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவைப் பாதிப்பவை போன்றவை.

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அலுவலகம் முதல், மத்திய, மாநில அரசு அலுவலகங்ளில் ஒரு பொது தகவல் அதிகாரி உள்ளார்.

தகவல் பெற விரும்புவோர் அவருக்கு முகவரியிட்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனு கொடுக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களை கேட்கலாம்.

இதற்காக தனியாக ஏதும் படிவம் இல்லை. ஒரு வெள்ளை தாளில் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை தெளிவாக தெரிவித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழ்கண்ட தகவல் வேண்டுகிறேன் என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

ஒரு மனுவில் எத்தனை கேள்விள் வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஒவ்வொரு மனுவுடன் ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணத்தை நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியோ, வங்கி வரைவோலையை இணைத்தோ, அஞ்சல் ஆணையை இணைத்தோ, அரசு கருவூலத்தில் சலான் மூலமாகவோ செலுத்தலாம்.

எந்த காரணம் கொண்டும் தபாலிலோ அல்லது மணியாடர் மூலமாகவோ கட்டண தொகையை அனுப்பக்கூடாது.

சரியான அலுவலகத்தில் மனுவை அளிக்க வேண்டும்.

இவ்வாறு தகவல் கேட்கும் உங்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும்.
தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

தவறான அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டால் அவ்வலுவலக தகவல் அதிகாரியே சரியான அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு 5 நாட்கள் கால தாமதம் ஆகும்.

தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:

தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375,
முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.

தொலைபேசி எண் 044-24357580

மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:

மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன்
2 வது தளம், பி-பிரிவு.
நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056

தொலைபேசி எண்கள் 011-26717353, 26761137

Thursday, January 10, 2008

பெண்கள் கவனத்திற்கு

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி
நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும்
விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :

பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப்பெண்களின் படங்கள் , வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம்
என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.



பள்ளி , கல்லூரி, விடுதிகளில் :

பள்ளி , கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை , குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. இதிலும்
பர்தாவைப் பேணும் மாணவிகள் தப்பித்தார்கள் என்று சொல்லலாம் மற்றவர்கள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.


பொதுக்கழிப்பிடங்கள் , குளியலறைகள் , ஹோட்டல் அறைகள் :

பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை , குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு
தெரியாமல் தங்களை , தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.



மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக்
கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த
குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய்
அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி
படமெடுத்து , வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து
கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.



ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப் பட்டிருக்கும் கண்ணாடிகளும் :

நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து
சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்
பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா , துணிகளை மறைக்கிறார்களா
என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த
கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும்
நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம்
பார்ப்பவர்களுக்கு ஒளிவு , மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம்
காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம்
இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.

நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம்
நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம்
எல்லோரிடமும் ஒருஎச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.

Tuesday, January 8, 2008

அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்

அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்! அவனே தன் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். அவனது தூதர் முஹம்மது அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டுமாக. அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினார்கள்! இறைவனின் மார்க்கத்தை ஒளிவு மறைவின்றி அனைவருக்கும் போதித்தார்கள்! இறைவழியில் இறுதிவரை உண்மையான முறைப்படி ஜிஹாது செய்தார்கள் . அவர்களை ஏற்றவர்கள் ஏற்றம் கண்டனர். அவர்களை ஏற்க மறுத்தவர்கள் பெரும் நஷ்டமடைந்தனர்.

வல்லமை மிக்க அல்லாஹ் கூறுகின்றான்

'' நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். (இவ்வாறே) வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். '' (9:36)

அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36) புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்.

மற்ற மாதங்களில் அநீதி இழைப்பதை விட புனிதம் மிக்க மாதங்களில் இழைக்கப்படும் அநீதி அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய குற்றமாகும். அநீதி இழைப்பது எப்போதும் கூடாது. புனிதம் மிக்க மாதங்களில் இழைக்கப்படும் தவறுகளுக்கு மிகப்பெரிய தண்டனை உண்டு. அல்லாஹ் சில இடங்களை , சில மனிதர்களை , சில நேரங்களை சில நாட்களை , சில மாதங்களை புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதப்படுத்துவதை நாமும் புனிதமாகக் கருதுவதும் அவற்றைப் பேணுவதும் அவசியம் ஆகும்.

மஸ்ஜிதுல் ஹராமில் தீங்கிழைக்க நாடுவதே குற்றமாகும் ( 22:25) என்று அல்லாஹ் குறிப்பிடுவதற்கு ஒப்ப புனிதம் மிக்க மாதங்களில் தீங்கிழைத்து விடுவதைக் குறித்து மிகவும் அச்சம் கொள்ளவேண்டும். இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் ''நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் சின்னங்களையோ புனிதம் மிக்க மாதங்களையோ (நீங்கள் தீங்கிழைக்கக) ஆகுமானதாக்கிக் கொள்ளாதீர்கள் '' (5:2)

'' இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப் படுத்துகின்றாரோ அது உள்ளத்தின் பயபக்தியைச் சார்ந்ததாகும் '' (22:30)

அல்லாஹ்வுக்கு விருப்பமானது

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். முஹர்ரம் என்பதன் பொருள் புனிதமானது என்பதாகும். இதனை அல்லாஹ்வின் மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது இதன் மகத்துவத்துக்கு இன்னுமொரு சான்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹ §ரைரா (ரழி)


அவர்கள் அறிவிக்கின்றார்கள், '' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' ( முஸ்லிம், அஹ்மத்)

ஆஷ§ ரா நோன்பு

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷ § ரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன ? என்று கேடட்டார்கள். அதற்கு யூதர்கள் , இது ஒரு புனிதமான நாள் , இன்று தான் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன் , அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கின்றோம் என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் , மூஸா (அலை) அவர்களுக்கு உங்களை விட நானே அதிக உரிமையும் , தகுதியும் உடையவன் என்று கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று , பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (புகாரி , முஸ்லிம், அஹ்மத்)

ஆஷ § ரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள்.

அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷ § ரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் , '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும் '' என்று கூறினார்கள். (முஸ்லிம்)

ஆக முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாவது (அதாவது தாசுஆ மற்றும் ஆஷ § ரா) நாட்களில் நோன்பு நோற்பது நபிவழி என அறியலாம். கர்பலா சம்பவத்திற்கும் ஆஷ§ ரா தாசுஆ நோன்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிக. மேலும் அதனைத் தொடர்பு படுத்தி மவ்லிது ஓதுவதும், பஞ்சா எடுப்பதும் தீ மிதிப்பதும் ஊர்வலங்கள் செல்வதும் அநாச்சாரம் ஆகும். அநாச்சாரங்கள் நரகத்தின்பால் இட்டுச்செல்வாதாகும். இதனை நபித்தோழர்கள் செய்யவில்லை, இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை. மேலும் அவை அல்லாஹ் புனிதப்படுத்தியவற்றைக் களங்கப்படுத்தும் செயலாகும்.


யா அல்லாஹ்! நன்மைகள் செய்யவும் உன்பால் நெருங்கவும் எங்களுக்கு அருள் பாலிப்பாயாக! உனக்கே எல்லாப்புகழும்!

Wednesday, January 2, 2008

Overseas workers to get 24x7 helpline

NEW DELHI: Overseas Indian Affairs (OIA) Ministry will soon set up a "Resource Centre" here for helping overseas workers in distress.

"It will be a one-stop destination for Indian workers," a top official of the OIA ministry said here on Saturday, adding that the Overseas Workers Resource Centre would work round-the-clock on all days.

All that a worker in distress has to do is to call a toll-free number 1800-11-3090 to get proper advice on how to overcome his problems in his host country.

The Centre would also provide information about how and when to seek legal assistance in case of denial of wages and violation of contract.

He pointed out that the centre would help a lot to redress the grievances of Indian workers at a time when many countries are keen to ensure that labour laws are strictly adhered to by the employers there.

The toll-free helpline could also be used by the victims of bad NRI marriages so that the ministry could initiate appropriate remedial steps.

The official said there was also a plan to set up an overseas employment promotion council to provide information about new job opportunities in foreign countries.

"This is envisaged as a counselling mechanism to help Indians go through a legal channel for employment," he said, adding that it would help to reduce incidence of cheating of overseas job seekers by travel agents.

Tuesday, January 1, 2008

வெளிநாட்டு வேலை மோகத்தில் இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை

வெளிநாட்டு வேலை மோகத்தில் இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ஏமாறாமல் இருக்க துண்டு பிரசுரங்கள், கார்ட்டூன் படங்கள் மூலம் பிரசாரம்

சென்னை, ஜன.1-
வெளிநாட்டு வேலை மோகத்தில் இருப்பவர்களை குறிப்பாக, பெண்களை போலீசார் எச்சரித்துள்ளனர். அவர்கள் ஏமாறாமல் இருக்க துண்டு பிரசுரங்களை வெளியிட்டும், கார்ட்டூன் படங்கள் மூலமும் உரிய அறிவுரைகளை வழங்கி போலீசார் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
எச்சரிக்கை
வெளிநாட்டு வேலை மோகத்தில் ஏராளமானபேர் பணத்தை இழப்பதாக தினந்தோறும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் வந்து குவிகின்றன. வேலை மோகத்தில் வெளிநாடு செல்லும் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படும் கொடூர சம்பவங்களும் நடப்பதாக தற்போது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசேஷ முயற்சியில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு வேலை மோகத்தில் பணத்தை கொடுத்து ஏமாறாமல் இருப்பதற்காக உரிய ஆலோசனைகள் அடங்கிய ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை அச்சிட்டு, வெளியிட்டுள்ளனர்.
இந்த துண்டு பிரசுரங்கள் சென்னை நகரில் முக்கிய இடங்களில் குறிப்பாக, அனைத்து போலீஸ் நிலைய வாசல்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல ஏமாறுவதை தடுக்க கார்ட்டூன் படங்கள் வெளியிட்டும் போலீசார் பிரசாரம் செய்து வருகிறார்கள். இணையதளங்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் ஏமாறுவதை தடுக்கவும், கார்ட்டூன் படங்கள் போலீசாரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அடங்கிய கையடக்க புத்தகம் ஒன்றையும் போலீசார் தயாரித்துள்ளனர். சென்னை சுற்றுலா பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ள போலீஸ் அரங்கத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இந்த கையடக்க புத்தகங்களை போலீசார் இலவசமாக கொடுக்க உள்ளனர். கார்ட்டூன் படங்களும், துண்டு பிரசுர நோட்டீசுகளும் பொருட்காட்சி போலீஸ் அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
20 அறிவுரைகள்
போலீசாரின் துண்டு பிரசுரத்தில் வெளிநாட்டு வேலை நாட்டத்தில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக 20 அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிவுரைகள் விவரம் வருமாறு:-
* வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா? அல்லது போலி நிறுவனமா? என்பதை, சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் மத்திய அரசின் குடியுரிமை பாதுகாப்பு அலுவலகத்தை 044-24891337 என்ற டெலிபோன் எண்ணில் தொடர்பு கொண்டோ, அல்லது நேரில் சென்றோ தெரிந்து கொள்ளலாம்.
* சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு போகக்கூடாது. * அரசு அனுமதி பெறாத வேலைவாய்ப்பு நிறுவனங்களை வேலைக்காக அணுகாதீர்கள். * வேலைக்கான வெளிநாட்டு விசாவை முன்கூட்டியே வாங்கிக்கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் விமான நிலையத்தில் போய் வாங்காதீர்கள்.
* வெளிநாட்டு வேலை தொடர்பான ஒப்பந்தத்தை நன்றாக படித்து பார்த்துக்கொள்ளுங்கள். * ஒப்பந்தம் பற்றிய ஜெராக்ஸ் நகல்களை கைவசம் வைத்திருங்கள். * விசாவை கையில் வாங்கும்வரை வேலைவாய்ப்புக்கான பணத்தை கொடுக்காதீர்கள். * விசாவில் உள்ள தேதியை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
* வெளிநாட்டு வேலைக்கு போகும் முன்பு ஐ.ஆர்.டி.ஏ. மூலம் பதிவு செய்யப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மூலம் ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள். * ஆயுள் காப்பீடு எடுத்துக்கொண்டால் வெளிநாட்டு வேலையில் இருக்கும்போது, ஒருவேளை இறக்க நேரிட்டால் ரூ.2 லட்சம் வரை காப்பீட்டு தொகை கிடைக்கும். அதோடு வெளிநாட்டில் பிரச்சினை என்றால் நீங்கள் நாடு திரும்பி வருவதற்கு உரிய பணமும் கிடைக்கும்.
வங்கி கணக்கு
* வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பு உங்கள் பெயரில் வங்கி கணக்கு ஒன்றை தொடங்கி கொள்ளுங்கள். * விசா உண்மையானதா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால், சென்னை அசோக்நகரில் உள்ள இந்திய குடியுரிமை அலுவலக அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். * வேலைக்கு அனுப்பும் நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் உள்ளதா என்பதை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்வது நல்லது.
* எந்தவொரு நிபந்தனை படிவத்திலோ, அல்லது வெள்ளை தாளிலோ யாரிடமும் கையெழுத்து போட்டுக் கொடுக்காதீர்கள். * நீங்கள் எந்த நாட்டிற்கு செல்கிறீர்களோ அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை தெரிந்து வைத்திருங்கள். * பிரச்சினை ஏற்பட்டால் உடனே இந்திய தூதரக அதிகாரியிடம் தைரியமாக புகார் கொடுங்கள். * அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட, கூடுதல் தொகையை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கேட்டால் கொடுக்காதீர்கள். * சப்-ஏஜெண்டுகளை நம்பி பணத்தை கொடுக்காதீர்கள்.
ஆன் லைன்
* ஆன் லைன் மற்றும் இன்டர்நெட்டில் வரும் வேலைவாய்ப்பு விவரங்களை உண்மை என்று நம்பி பணம் கட்டிவிடாதீர்கள். முழுமையாக சரிபார்த்து பணத்தை கட்டுங்கள். * போலி ஏஜெண்டுகள், போலி நிறுவனங்களிடம் ஏமாறும்பட்சத்தில் உடனடியாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 100 டெலிபோன் எண்ணிலோ அல்லது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிற்கு 23452317 என்ற தொலைபேசி எண்ணிலோ பேசி புகார் தெரிவிக்கலாம். உடனடியாக போலீசார் உதவிக்கு வருவார்கள்.
இவ்வாறு துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.