Tuesday, April 8, 2008

தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள்

தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள்
அஷ்ஷைக்: முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்
(தமிழில் எம்.ஜே.எம். ரிஸ்வான்)


بسم الله الرحمن الرحيم
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானது. அல்லாஹ்வின் அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர்கள், தோழர்கள், தோழியர்கள், அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
முதலாவது அம்சம்:-
இறையச்சத்தை ஏற்படுத்தி, அதனை வலுப்படுத்தக் கூடியவைகள்.

1-தொழுகைக்காக தயாராகுதலும், அதற்கான ஆயத்தங்கள் செய்வதும். இது பல அம்சங்களைக் கொண்டதாகும். அவைகளில்:-

முஅத்தின் கூறும் பாங்கைப் போன்று பதில் பாங்கு கூறுதல், அதானுக்கும், இகாமத்திற்கு இடையில் பிரார்த்தித்தல், பிஸ்மில்லாஹ் கூறி உழூவை ஆரம்பம் செய்தல், அதன் பின்னர் திக்ர், பிரார்த்தனைகள் செய்தல், மிஸ்வாக் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுதல், தூய்மையான அழகிய ஆடைகள் அணிந்து, அடக்கத் தோடும், பணிவோடும் பள்ளிக்குச் சென்று தொழுகையை எதிர் பார்த்திருத்தல், தொழுகையின் (ஸஃப்-ஐ) வரிசையை சரி செய்வதுடன் அதில் நெருக்கமாக நிற்றல் போன்ற காரியங்கள் உள்ளடங்கி இருக்கும்.

2-தொழுகையில் அமைதி பேணுதல். நபி (ஸல்) அவர்கள் தனது எலும்புகளின் இடுக்குகள் அதனதன் இடத்தில் மீண்டு நிலை பெறுகின்ற வரை தொழுகையில் அமைதி பேணுபவர்களாக இருந்தார்கள்.

3-தொழுகையில் மரணத்தை நினைவு கூறுதல். (உனது தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவீராக! ஏனெனில் ஒரு மனிதன் தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவதால் அவனது தொழுகையை அழகாக தொழுவதற்கு வாய்ப்புக்கிட்டும். மேலும் இதன் பின்னரும் தொழுகை கிடைத்திடாது என எண்ணித் தொழும் மனிதனின் தொழுகை போன்று தொழுவாயாக! என ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4-ஓதப்படும் திருமறை வசனங்களையும், திக்ருகளையும் சிந்தனைக்கு எடுத்து, அவைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்துதல். இதில் உள்ளம் கனிந்து, தாக்கம் ஏற்பட்டு, கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட வேண்டுமானால் ஓதப்படும் வசனங்கள், திக்ருகள் ஆகியவற்றின் கருத்துக்களின் ஆழத்தை அறிந்த ஒருவருக்கே இது சாத்தியமாகும். இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற போது:

(இன்னும் அவர்களுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் குருடர்களையும், செவிடர்களையும் போல் அதில் விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்-26:73) எனக் குறிப்பிடுகின்றது.
"தஸ்பீஹ் உடைய வசனங்கள் இடம் பெறுகின்ற போது தஸ்பீஹ் செய்வது கொண்டும், (இஸ்திஆதா) பாதுகாப்பு வசனங்கள் வருகின்ற போது பாதுகாவல் தேடுவது கொண்டும் செயல்படுவதுடன், வசனங்களுடன் மனம் விரிந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது சிந்திப்பதற்கு துணையாக அமையும். மேலும் ஃபாதிஹா அத்தியாயம் ஒதப்பட்டதும் அதற்குப் பதிலளித்து ஆமீன் கூறுவதால் மகத்தான கூலியும் கிடைக்கின்றது.

(இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள் ஏனெனில் மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர். எவர் ஆமீன் கூறுவது மலக்குகளின் ஆமீனுடன் நேர்படுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). அதே போன்று இமாம் "ஸமி அல்லா ஹு லிமன் ஹமிதா" எனக் கூறினால் அதற்குப் பதிலளித்து " றப்பனா லகல் ஹம்து" எனக் கூறுவது மகத்தான கூலியைப் பெற்றுத்தரும்.

5-ஓதலை தனித்தனி வசனமாக ஓதுதல். இது வசனத்தை விளங்கவதற்கும், சிந்திப்பதற்கும் பிரதான காரணியாகவும், நபியின் சுன்னத்தாகவும் விழங்குகின்றது. நபி (ஸல்) அவர்களின் ஓதல் அமைப்பு ஒவ்வொரு எழுத்தையும் தெளிவாக்கிக் காட்டக்கூடியதாக இருந்தது.
6-அல் குர்ஆனை அதன் முறையைப் பேணியும், அழகிய ஓசை நயத்துடனும் ஓதுதல்.

அல்லாஹ் அல்குர்ஆனில்: "மேலும் குர்ஆனை (தெளிவாக வும்), அதன் முறையைப் பேணியும் ஓதவீராக எனக் குறிப்பிடுகின்றான். "உங்களது ஓசை நயத்தைக் கொண்டு அல் குர்ஆனை அலங்கரியுங்கள். ஏனெனில் அழகிய ஓசை நயம் குர்ஆனுக்கு இன்னும் அழகை அதிகரிக்கின்றது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹாகிம்).
7-அல்லாஹ் தொழுகையில் பதில் தருகின்றான் என்பதை அறிந்து தொழுதல்.

அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகை என்ற ''ஃபாத்திஹா" அத்தியாயத்தை எனக்கும் எனது அடியானுக்கும் இடையில் இரு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளேன், எனது அடியான் வேண்டுவதெல்லாம் அவனுக்கு (என்னால்) வழங்கப்படும், அடியான் "அல்ஹம்து லில்லாஹ் றப்பில் ஆலமீன்" எனக் கூறினால் அல்லாஹ் எனது அடியான் என்னை புகழ்ந்துள்ளான் எனக் கூறுகின்றான், (அடியான்) "அர்ரஹ் மானிர் ரஹீம்" எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் "எனது அடியான் என்னை துதித்துள்ளான்" எனக் கூறுகின்றான், (அடியான்) "மாலிகி யவ்மித்தீன்" எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் "எனது அடியான் என்னை மேன்மைப்படுத்தி விட்டான்" என பெருமிதம் கொள்கின்றான், "அடியான் இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்" எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் "இது எனக்கும் எனது அடியானுக்கும் இடையிலுள்ளதா (சமாச்சாரமா)கும், எனது அடியான் வேண்டுவதை எல்லாம் அவனுக்கு உண்டு. (நான்வழங்குவேன்) (அடியான்) " இஹ்தி நஸ்ஸிராதல் முஸ்தகீம் ஸிரா தல்லதீன் அன்அம்த அலைஹிம் கைரில் மஃக்லூபி அலைஹிம் வலல்லால்லீன்"; எனக் கூறினால் இது எனது அடியானுடன் தொடர்புடயதாகும், எனது வேண்டுவதை அவனுக்குண்டு) வழங்குவேன். என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறிக் காட்டினார்கள்.
8-தொழுகையில் (சுத்ரா)தடுப்பை வைத்து, அதன் பக்கமாக நெருங்கித் தொழுதல்.

இவ்வாறு தொழுவதால் உள்ளச்சத்துடனும், பார்வையை சிதறிவிடாமலும், அதனைக் கடக்க எத்தணிப் போரை தடுத்தும், நிம்மதியாக தொழுவதற்குத் துணையாகவும் அமைவதுடன், தொழுகையை ஊடறுத்துச் சென்று அதனை பாழடித்திடும் ஷைத்தான்களின் நடவடிக்கைகளிகலிருந்தும் தற்காத்துக் கொள்ள உதவும். (உங்களில் தொழும் ஒருவர் ஷைத்தான் அவரது தொழுகையை முறித்திடாதவாறு (சுத்ரா) தடுப்பிற்கு நெக்கமாக நின்று தொழுது கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூதாவுத்).

9-வலது கையை இடது கையின் மீது ஆக்கி நெஞ்சின் மீது வைத்து தக்பீர் கட்டுதல். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தயாரானால் அவர்களது வலது கையை இடது கையின் மீதாக்கி, நெஞ்சின் மீது வைப்பார்கள. இந்த அமைப்பு பணிந்து யாசிப்பவன் நிலை போன்றதாகும். மேலும் அது வீண் சேட்டைகளிலிருந்து தடுப்பதுடன், இறை அச்சத் திற்கு மிகவும் நெருக்கமாகவும் அமைகின்றது.
10-பார்வையை சுஜூத் செய்யும் இடத்தின் பக்கமாக நோக்குதல். நபி (ஸல்) அவர்கள் தொழுவார்களாயின் தனது தலையை தாழ்த்தி தனது பார்வையை பூமியின் பக்கமாக செலுத்துபவர்களாக இருந்தார்கள். "தஷஹ்ஹுத்" ஓதுவதற்காக அமர்ந்தால் தனது பார்வையை ஆட்காட்டி விரலின் பக்கம் நோக்கியவர்களாக ஆக்கி, அதனை (விரலை) அசைப்பவர்களாக இருந்தார்கள். என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
11-ஆட்காட்டி விரலை அசைத்தல். இது இரும்பால் அடிப்பதை விட ஷைத்தானுக்கு மிகவும் கடிமான ஒரு கடிமானதாகும் என(முஸ்னத் அஹ்மத்) எனும் கிரந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அடியான் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதும், வணக்கத்தில் மனத்தூய்மையும் பொதிந்துள்ளது. இது ஷைத்தான் மிகவும் வெறுக்கின்ற ஒரு காரியமாகும்.

12- தொழுகையில் அத்தியாயங்கள், வசனங்கள், திக்ர்(இறை நினைவு)கள், பிரார்த்தனைகள் ஆகியவற்றை பலதரப்படுத்தி ஓதுதல். இந்நிலை தொழுகையாளிக்கு புதிய பல கருத்துக்கள், திக்ருகள் ஆகியவற்றை உணர்த்தும். இந்த நடைமுறை சுன்னாவாகவும், உள்ளச்சத்தில் பூரண நிலையை தேடித்தரக் கூடியதாகவும் இருக்கின்றது.

13-சுஜூதின் வசனங்கள் குறிக்கிடும் போது சுஜுத் செய்தல். இன்னும் அழுதவர்களாக முகம் குப்புற விழுவார்கள் இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். என 18:109 வனத்திலும், அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்கள் மீது ஓதிக் காட்டப்பட்டால் அவர்கள் அழுதவர்களாகவும், சுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள். என்று 19:58 வசனத்திலும் அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

"ஆதமின் மகன் சுஜ்தா வசனத்தை ஓதி சுஜுதும் செய்தால் ஷைத்தான் ஒரு ஓரமாக ஒதுங்கி, அழுது கொண்டு, எனக் கேற்பட்ட கேடே! சுஜூது செய்யுமாறு பணிக்கப் பட்ட ஆதமின் மகன் அதனை நிறை வேற்றினான். ஆகவே அவனுக்கு சுவனம் உண்டு. நானும்; சுஜுது செய்யும்படி ஏவப்பட்டிருந்தேன். ஆனால் (அதனை நிறை வேற்றாது) மறுத்தேன். ஆகையால் எனக்கு நரகம் உண்டு எனக் கூறி, கூறி கதறுவான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

14-அல்லாஹ்விடம் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாவல் கோரல். ஷைத்தான் எமது விரோதியாவான். தொழுகையாளி ஒருவரின் உள்ளச்சம் போகும் வரை அவனது தொழுகையை குழப்பி, அவனில் ஊசலாட்டங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது அவனது விரோத செயற்பாடுகளில் உள்ளதாகும். இதனால்தான் அடியான் அல்லாஹ்விடம் நெருங்கிச் செல்லும் போதெல்லாம் அவனை வழிப்பறிக் கொள்ளைக்காரன் போன்று தடுத்து நிறுத்துகின்றான். இறை விசுவாசி இவைகளுக்கு முன்னால் உறுதியாக இருப்பதும், சகிப்புடனும் இருந்து அதிலிருந்து விடுதலை பெறத் தேவையான திக்ருகள், தொழுகைகள் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடித்து (அரண் அமைப்பதால்) அவன் அதிலிருந்து விலகிவிடுகின்றான். ஏனெனில் "ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாகும் என அல்லாஹ் அல்குர்ஆனில் 3:76-ல் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

15-முன்னோர்களின் தொழுகையிலுள்ள உயிரோட்டத்தை சிந்தித்தல். அலி (ரலி) அவர்கள் தொழுகை நேரம் வந்து விட்டால் நடுக்கம் பிடித்து, அவர்களின் முகம் சிவந்து விடும். அது பற்றி அவர்களிடம் வினவப்பட்ட போது "அல்லாஹ்வின் மீதாணையாக! வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்ட இந்தப் பொறுப்பை அவைகள் ஏற்காது, ஒதுங்கிக் கொண்டன. ஆனால் நான் அதனை சுமந்து கொண்ட நேரம் வந்து விட்டது. எனக் கூறுவார்கள். எனவும், அறிவிக்கப்படுகிறன்றது. ஸயீத் அத்தன்னூகி என்ற அறிஞர் தொழ ஆரம்பித்தால் அதை முடிக்கின்ற வரை அவரது கன்னங்களிலிருந்து கண்ணீர் கசிந்த வண்ணமாகவே இருக்கும் எனக் கூறுகின்றனர்.

16- தொழுகையில் இறையச்சத்துடன் இருப்பது பற்றிய சிறப்பம்சத்தை உணர்தல். கடமையான தொழுகை சமூகம் தரும் எந்த முஸ்லிமும் அதன் உழூவையும், அதன் ருகூவையும், அதன் உள்ளச்சத்தையும் அழகு படுத்திக் கொள்வாரானால் அவரது பெரும்பாவமில்லாத எந்தப்பாவத்திற்கும் அது பரிகாரமாக அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்).
17-தொழுகை பிரார்த்தனை செய்ய வேண்டிய இடங்களில் -குறிப்பாக- சுஜூதின் நிலையில் அதிகம் ஈடுபாடு காட்டுதல். உங்கள் இரட்சகனை பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தியுங்கள். (7:55). அடியான் தனது இரட்சகனுக்கு சுஜூதின் நிலையில் மிகவும் நெருக்கமாக இருக்கின்றான். ஆகவே அதில் பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள். (முஸ்லிம்).

18-தொழுகைக்குப்பின் ஓத வேண்டிய அவ்ராதுகளை ஓதுதல்.

புதிய பதிவுகள்

அத்வைதம் - NON DUALISM - டாக்டர் அஷ்ரப் (வீடியோ)

நபி (ஸல்) மற்றும் நபித்தோழர்களும் - மெளலவி அலாவுதீன் பாக்கவி (வீடியோ)

ஈமானில் உறுதி வேண்டும் - மெளலவி அலி அக்பர் உமரி (வீடியோ)

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) - Engr. ரஃபீக் ஜக்கரியா (வீடியோ)

அன்றாட வாழ்வே வழிபாடாக - மெளலவி ஜமால் முகம்மது மதனி (வீடியோ)

இறையச்சம் - மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (வீடியோ)

சமூக முன்னேற்றத்தில் பென்களின் பங்கு - மெளலவி மன்சூர் மதனி (வீடியோ)

Tuesday, March 25, 2008

Joke - IT Specialist & his wife


Read the joke. Hope you will enjoy it. It is about the conversation between an IT specialist and his wife...........

Husband - Hi dear, Im logged in.

wife - have you brought the saree.

husband - bad command or file name.

wife - but I told you about it in morning.

husband - erroneous syntax, abort, retry, cancel.

wife - hae bhagwan! forget it wheres your salary.

husband - file in use, read only, try after sometime.

wife - atleast give me your credit card, I can do some shopping.

husband - sharing voilation access denied.

wife - I made a mistake in marring you.

husband - data type mismatch.

wife - you are useless.

husband - by default.

wife - who was there with you in the car this morning.

husband - system unstable, press to reboot.

wife - would you like to have some snacks.

husband - hard disk full.

wife - what is relation between you & your receptionist.

husband - the only user with write permission.

wife - what is my value in your life.

husband - unknown virus detected.

wife - do you love me or your computer.husband - too many paramteres.

wife - I will go to my dads house.

husband - program performed illegal operation, it will close.

wife - I will leave you for ever.

husband - close all programs & log out for another user.

wife - it is worthless talking to you.

husband - shut down the computer.

wife - I am going.

husband - its now safe to turn off your computer.


நபிமொழி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நபிமொழி : 090 - NABIMOZI - 090

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'சொர்க்கத்தில் மக்களை நுழையச் செய்வதில் மிக அதிகமானவை எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''இறையச்சமும், நற்குணமும்தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். நரகத்தில் மக்களை அதிக அளவில் நுழையச் செய்வது எது? என்று கேட்கப்பட்டது. ''நாவும், மறைவுறுப்பும் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 627)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''மூஃமின்களில் இறைநம்பிக்கையில் முழுமையானவர், அவர்களில் குணத்தால் மிக அழகியவராவார். தங்களின் மனைவியரிடம் சிறந்தவர் தான் உங்களில் சிறந்தவர் ஆவார்.'' ஏன்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 628)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நிச்சயமாக ஒரு மூஃமின், தன் அழகிய குணத்தின் காரணமாக, நின்று வணங்கி நோன்பு நோற்கக் கூடியவரின் தகுதியை அடைவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 629)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன் ஆவான். ஒவ்வொரு காரியங்களிலும் அவன் மென்மையையே விரும்புகிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 633)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'மென்மை, இடம்பெறுகின்ற எந்தக் காரியமும், அது அழகாக்கி விடுகிறது. மேலும் அது இடம் பெறாத எதுவும், சேதப்படுத்தி விடுகிறது'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 635)

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நீங்கள் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். கடினமாக நடக்காதீர்கள். (மக்களை) வாழ்த்துங்கள். (அவர்களை) வெறுக்காதீர்கள்.'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 637)

''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, March 17, 2008

சத்தியத்தை அணைக்கவே முடியாது

இவ்வுலகத்தில் மனிதசமூகத்திற்கு நேர்வழிகாட்ட எண்ணற்ற மதங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாத்தங்கள் தோன்றின. அவற்றில் பல்வேறு வந்த வழியிலேயே சென்றுவிட்டன சில கொள்கைகள் நிலைத்து நிற்கின்றன அவற்றிலும் தூய இஸ்லாம் மட்டுமே இவ்வுலகம் அழியும் வரை நிலைத்து நின்று நேர்வழி காட்டி வெற்றிபெறும்.
அவன் தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (சூரா அத்தவ்பா : 33)
இப்படியிருக்கையில் இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியை கண்டுகொள்ள முடியாமல் மாற்றார்கள் ஊடகங்களில் வாயிலாக முக்கியமாக இணையதளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் இவ்வுலகத்திற்கு நேர்வழிகாட்ட வந்த இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் மீது கலங்கத்தை ஏற்படுத்தியும் வருகிறார்கள். இவ்வாறான குற்றச்சாட்டுகள் சில தவறான எண்ணங்களுடனும் யூகத்தின் அடிப்படையிலும் எடுத்துவைக்கப்படுகிறது. அவர்களுக்கு சத்தியத்தை புரிய வைக்கவும் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே மிகைத்து நின்று வெற்றிவாகை சூடும் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆகவே இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் சத்தியவழிக்கு என்றைக்குமே முட்டுகட்டை போடமுடியாது என்பதை எல்லாம் வல்ல இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.(அல்குர்ஆன் 53:28)
ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 10:36)
வேதக்காரர்களான யூதர்களும் கிரிஸ்தவர்களும் உண்மை மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று தெரிந்த பின்னரும் வறட்டு கௌரவத்தால் சத்தியத்தை நிராகரித்து இறைவேதத்தை இருட்டடிப்பு செய்தும், நவிமொழிகளை நாசவேளை செய்தும் உண்மைக்கு மாற்றமான செய்திகளை பரப்பிவருகிறார்கள். அல்குர்ஆனில் சில வசனங்களை மாற்றியமைத்து தனக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குகிறார்கள். இதுபோதுமல்லாது பல இணையதளங்களை நிறுவி அதன்மூலம் காபாவில் சிலைவணங்குதல், நபிகளார்(ஸல்) அவர்களின் குடும்பத்தை பழித்து வர்ணித்தல், காட்டுமிரான்டி மார்க்கம் என்பனபோன்ற எண்ணற்றக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற வகையில் உண்மை எதுவென்று தெரிந்த பின்னரும் அவதூராக பரப்பிவருகிறார்கள். இதை இறைவன் அவர்களின் முகத்திறையை இவ்வாறு கிழிக்கிறான்,
வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)
இப்படி பல ஆக்கங்களை நிறுவி முஸ்லிம்களின் உள்ளங்களில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி தவறான வழிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அந்த கோர முகங்களின் நஞ்சு எண்ணமாகும். இவ்வாறு இணையதளத்தில் நிறுவப்பட்ட ஆக்கங்கள் புதிதாக இஸ்லாத்தை அறியவேண்டும் என்பதற்காக ஒருவர் விரும்பி தேடும்போது இதை பார்ப்பாரேயானால் விரண்டோடக்கூடிய ஒரு துர்பாக்கிய சூழ்நிலைதான் அங்கு உருவாகும். ஆகவே இப்படிப்பட்ட பல சூழ்ச்சிகளின் மூலம் இஸ்லாத்தின் எழுச்சியை அமுக்க நாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை தங்களது விழிகளை உளியை கொண்டு குத்திக்கொண்டு இருக்கிறோம் என்று. இறைவன் அந்த வேதக்காரர்களின் கூறுகெட்டச் செயலை இவ்வாறு விவரிக்கிறான்.
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும் (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. (அல்குர்ஆன் 3:69)
இன்னொரு பக்கம் இணைவைப்பாளர்கள் நடத்துகின்ற தவறான பிரச்சாரங்கள், முஸ்லிம்களின்மீது கட்டவிழ்த்துவிடுகின்ற மனித இனப்படுகொலைகள், சமூகத்தையே தறமட்டமாக்கும் கற்பழிப்புகள், குழந்தையை வயிற்றியிலிருந்து கீறியெடுத்து கொலைசெய்கின்ற அக்கிரமங்கள், குண்டுமழை பொழிவுகளின் மூலம் நாட்டையே சுடுகாடாக்கும் கொடூரம், சத்தியவாதிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து சர்வதேச அளவில் இறைமறையோடு வாழ்பவர்களை சிறையோடு கொல்லும் அவலம், பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் பர்தாவை ஆனாதிக்கம் என்று கூப்பாடு போடும் கோழைத்தனம், முஸ்லிம்கள் முன்னேறக்கூடாது என்பதற்காக இடஒதுக்கீடை எதிர்க்கும் இறக்கமற்றச் செயல், மறையோதுவதற்காக கட்டப்பட்ட இறையில்லங்களை இடித்திடும் இழிநிலை, இஸ்லாமின் வளர்ச்சியை பார்த்து நடுங்கும் வஞ்சகம், வாய்மையால் பரப்பப்பட்ட மார்க்கத்தை வாளால் வளர்க்கப்பட்டது என்று வாதிடும் பேதிகள், சத்தியத்தில் அசத்தியத்தை கலக்கும் கடும்போக்கு, அறப்போரை அறியாமல் விளக்கம் கொடுக்கும் அறிவிழித்தனம், உண்மைவாதிகளை பழமைவாதிகளாக சித்தரிக்கும் பாசிசத்தன்மை, இறைச்சட்டங்களை ஊனச்சட்டங்களாக ஊதும் ஊடகங்கள், நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகத்தை விதைக்கும் அரக்கத்தனம், இறைவேதத்தை குறைகூறும் முறையற்ற போக்கு, இறைதூதரை கறைகொண்டு பூசும் கொடுமை, இப்படி பல செய்கையின் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தடைபோட எண்ணுகிறார்கள் ஆனால் உண்மையில் இன்று உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.
சர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும். உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது எனலாம். இதற்கு சான்று பகர்க்கும் முகமாக சில முக்கியமான நபர்கள், பத்தரிக்கைகள் கூறும் கூற்றை இங்கு பார்ப்போம்.
இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது, இது நம்முடைய பல்வேறு மக்களின் வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் நிலைப்பாட்டுக்கும் காரணமாக அமைந்துள்ளது. (அமெரிக்க அதிபர் கிளின்டனின் மனைவி ஹில்லாரி கிளின்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி, மே 31,1996. பக்.3)
இன்று உலகில் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற குழுவாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.(மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக்க குறிப்பு, USA Today பத்திரிக்கைக் குறிப்பு, பிப்ரவரி 17,1989 பக் 4A)
இஸ்லாம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற மதமாக இருக்கின்றது. (ஜெரால்டின் பாம், நியூஸ் டே பத்திரிக்கையின் மதம் பற்றிய எழுத்தாளர், மார்ச் 07, 1989 பக். 4).
இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது. (ஆரி டு. கோல்டுமேன், நியூயார்க் டைம்ஸ் பிப்ரவரி 21,1989 பக்1 ).
மார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல்வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.
ஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.
லோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். 4 மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன்.
நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவவாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது. இவ்வாறு இஸ்லாம் அசுரபலத்தில் வளர்ந்து கொண்டுருக்கையில் சில விசமிகள் பொருக்க முடியாமல் சில தவறான ஆக்கங்களை நிறுவியும், அவதூறான செய்திகளை பரப்பியும் வருகிறார்கள், நாங்கள் ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம் அது இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம்,
நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள் அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (அல்குர்ஆன் 7:181)
ிருக்குர் ஆன் மனித சமூகத்திற்கு நேர்வழிகாட்டியாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறியக்கூடியதாகவும் இருக்கிறது.
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். (அல்குர்ஆன் 86:13)
இது மட்டுமே இறைவனால் ஏற்றுக்கொள்ளக் கூடியதும், முடிவில் எல்லா மதங்களை விடவும் மிகைத்து நின்று வெற்றிபெரும். ஆகவே நீங்கள் எவ்வளவுதான் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளிக்கு என்றைக்குமே திறையிட முடியாது என்பதை எல்லாம் வல்ல இறைவன் குர் ஆனில் பல்வேறு வசனங்களின் மூலம் இந்த சமூகத்திற்கு தெளிவுபடுத்துகிறான்,
(நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக.( 17:81)
அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம் அதனால், சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.( 21:18)
இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) இறைவனுடைய பிரகாசத்தை அணைத்து விட விரும்புகின்றனர். எனினும் இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாச்தைப் பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப் போவதில்லை. (சூரா அத்தவ்பா : 32)

Monday, March 10, 2008

Sahih Buhari

Narrated Ibn 'Abbas: (Volume 3, Book 34, Number 426)

Once 'Umar was informed that a certain man sold alcohol. 'Umar said, "May Allah curse him! Doesn't he know that Allah's Apostle said, 'May Allah curse the Jews, for Allah had forbidden them to eat the fat of animals but they melted it and sold it."

Narrated Abu Huraira: (Volume 3, Book 34, Number 425)

Allah's Apostle said, "By Him in Whose Hands my soul is, son of Mary (Jesus) will shortly descend amongst you people (Muslims) as a just ruler and will break the Cross and kill the pig and abolish the Jizya (a tax taken from the non-Muslims, who are in the protection, of the Muslim government). Then there will be abundance of money and no-body will accept charitable gifts.

Narrated 'Abdullah bin 'Abbas: (Volume 3, Book 34, Number 424)

Once Allah's Apostle passed by a dead sheep and said to the people, "Wouldn't you benefit by its skin?" The people replied that it was dead. The Prophet said, "But its eating only is illegal."

தினம் ஒரு நபிமொழி!

"நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு நான் திரையிட்டேன். அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் வலக் கரத்தால் தங்களின் இடக்கையில் ஊற்றினார்கள். தங்களின் மர்மஸ்தலத்தையும் அவர்கள் மேனியில் பட்டதையும் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரின் மீதோ, பூமியிலோ தேய்த்தார்கள். பின்னர், தொழுகைக்குரிய உளூவைச் செய்஡ ?ார்கள். இரண்டு கால்களையும் கழுவவில்லை. பிறகு அவர்கள் தங்களின் உடம்பின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு பாதங்களையும் கழுவினார்கள்" மைமூனா(ரலி) அறிவித்தார்.
(ஸஹிஹுல் புகாரி பகுதி : 1,அத்தியாயம் : 5 , எண்: 281)