நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "முஹர்ரம் பத்தாவது நாளில் ஆஷுரா நோன்பு நோற்பது அதற்கு முந்தய ஓராண்டின் பாவத்திற்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்
ஆஷுரா என்னும் இந்த நாளையும் ராமலான் எனும் இந்த மாதத்தையும் தவிர வேறதையும் ஏனையவற்றை விட சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
ஆய்ஷா (ரலி) அவர்கள் கூறியதாவது, நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கபட்டதும் விரும்பியவர் (ஆஷுரா தினத்தில்) நோன்பு நோற்றனர். விரும்பாதவர் விட்டுவிட்டனர்.
நபி (ஸல்) அவர்களிடம் ஆஷுரா நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அது கடந்த ஆண்டின் பாவத்திற்கு பரிகாரமாகும் என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் "இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.